இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 இல் அரங்கேறிய சில விஷேட, சுவாரஸ்யமான அம்சங்கள்

0
184

📌 வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் சுமார் 48 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

📌 வாக்களித்தவர்களில் சுமார் 4 அரை இலட்சம் பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

📌 70 கும் மேற்பட்ட பிரபலமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது
ஆசனத்தை இழந்துள்ளனர்.

📌 60 கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றம் நுழைகின்றனர்.

அடிப்படையில் …..
📌ஒரு ஆசனத்தை வெல்ல அதிகபட்ச விருப்பு வாக்குகள் பெற்றவர் -மஹிந்த ராஜபக்ஷ ( SLPP , குருநாகல் ) – 527,364 வாக்குகள் பெற்றிருந்ததார்.

📌ஒரு ஆசனத்தை வெல்ல குறைந்தபட்ச விருப்பு வாக்குகள் பெற்றவர்- குலசிங்கம்
திலீபன் ( இபிடிபி , வவுனியா ) – 3,203 விருப்பு வாக்குகள் பெற்றிருந்தார்.

📌 மாவட்டத்திற்கான வாக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான
விருப்பு வாக்குகள் பெற்ற பிரதான 2 கட்சிகள் 01- மஹிந்த ராஜபக்ஷ – 81.1 % (குருநாகல்- SLPP)

02) – சஜித் பிரேமதாச ( SJB , கொழும்பு ) – 78.9 %

📌 ” பெரிய தோல்வி ” ( அதிக எண்ணிக்கையான விருப்பு வாக்குகளை பெற்றும் ஆசனத்தை பெற முடியாமல் தோற்றவர்கள் )

📌 லக்ஷ்மன் யாபா அபேவர்தனே ( எஸ்.எல்.பி.பி , மாத்தறை ) – 71,106 வாக்குகள்.

📌 தில்ஷன் விதானகமகே ( எஸ்.எல்.பி.பி , காலி ) – 56,484 வாக்குகள்

📌 இப்திகர் ஜமீல் ( எஸ்.ஜே.பி , களுத்துறை ) – 54,305 வாக்குகள்.

📌 இலங்கை தேர்தல் வரலாற்றிலே நாடளாவிய ரீதியில் ஐதேக எந்தவொரு
ஆசனத்தையும் வென்றெடுக்காத தேர்தலாக இது அமைந்துள்ளது.

📌நாடளாவிய ரீதியில் ஐதேக எந்தவொரு ஆசனத்தையும் வென்றெடுக்கவில்லை .

📌ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது.

📌சுமார் 40 வருடங்களின் பின் , ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ முதல் தடவையாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தார்.