இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 04 கிலோ 65 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது

0
8

திருகோணமலை – கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 04 கிலோ 65 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து கொண்டு வந்து கிண்ணியா பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டதாகவும் இவரை ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணையின் பின்னர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.