உங்கள் பெயரில் கூகுள் தரும் Visiting Card… இன்றே முந்துங்கள்

  0
  22

  இன்றைய காலகட்டத்தில் பிரபலமானவர்கள், தொழிலதிபர்கள் மாத்திரமன்றி பலரும் Visiting Card பயன்படுத்தி வருகின்றனர்.

  இவ்வாறான Visiting Card ஒன்றினை Virtual முறையில் கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது.

  இதற்கு People Cards என பெயரிடப்பட்டுள்ளது.

  இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

  எனினும் இச் சேவையானது தற்போது இந்தியாவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  இதில் பயனர் ஒருவர் தமது விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஒன்லைனில் Visiting Card தயார் செய்துகொள்ள முடியும்.

  இவ்வாறு ஒன்லைனில் தகவல்களை வழங்குவதனால் பயனர்களின் தகவல்கள் கூகுளில் காண்பிக்கக்கூடிய ஆபத்து உள்ளது.

  இதற்காக விசேட பின்னூட்டல் வசதி ஒன்றும் தரப்பட்டுள்ளது.

  இதன் ஊடாக தகவல் கசிவது தொடர்பாக புகார் அளிக்க முடியும்.