உங்கள் முகத்தில் கரும்புள்ளிகளா? வீட்டிலேயே மருத்துவம்

0
25

உடல் சூடு, உணவு முறை ஆகிய காரணங்களால் பலரின் முகத்தில் கரும்புள்ளிகள் உருவாகின்றன. அவற்றை அகற்ற இதோ ஒரு வழி:

தேவைப்படும் பொருட்கள்:

1 வாழைப்பழம் (நசுக்கியது)

2 மேசைக்கரண்டி ஓட்ஸ்

1 மேசைக்கரண்டி தேன்

செய்முறை:

முதலில் கிண்ணம் ஒன்றில் நசுக்கிய வாழைப்பழம், ஓட்ஸ், தேன் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றை நன்றாகக் கடையவும். நன்கு கடைந்தபின் உருவாகும் பசையை முகத்தில் தேய்த்துக்கொள்ளவும். ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு அந்தப் பசையை முகத்திலேயே வைத்திருக்கவும்.

இதற்குப் பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை அலம்பவும்.

செத்த சரும அணுக்களையும் மாசையும் அகற்ற ஓட்ஸ் உதவுகிறது.