உள்நாட்டு உற்பத்தியின் ஊக்குவிப்பால் இலங்கை தேசியக் கொடியின் சிங்கத்திற்கு ஏற்பட்ட நிலை..!

0
156

அரசாங்கம் தேசிய கொடியை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹரகம நகரசபையின் உறுப்பினர் தனுஸ்க ராமநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அண்மையில் இலங்கையின் தேசிய கொடியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, பட்டிக், கைத்தரி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் வழங்கப்பட்டிருந்தது.

இந்த தேசிய கொடி வழங்கும் புகைப்படமும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த தேசிய கொடியில் வாள் ஏந்திய சிங்கம் உரிய இடத்தில் வாளை ஏந்தவில்லை எனவும், வாளின் பிடியில் அன்றி வாள் பகுதியில் ஏந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கொடி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது என்ற போதிலும், உரிய தரத்தில் அமையப் பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எனினும், தேங்காய் மற்றும் அரிசி விலைக் கட்டுப்பாடு போன்று இந்த தேசிய கொடி உள்நாட்டு உற்பத்தி விவகாரமும் அமைந்துவிடக் கூடாது என அவர் தனது முகநூலில் குற்றம் சுமத்தியுள்ளார்.