உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு

0
19

உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதியளிக்கப்படாத எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்காது பாரபட்மின்றி செயற்படவேண்டியது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான இயலுமை அபிவிருத்தித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துதல் தொடர்பாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான 10மில்லியன் மதிப்பிலான உபகரணங்கள், பொருட்கள் கையளிப்பு நிகழ்வு 16-7-2020 அன்று காலை வட மாகாண உள்ளுராட்சி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ச.மோகநாதன், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைந்த சேவைகள் குழுத்தலைவர் சோனாலி தாகீர், வட மாகாண சபை திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் உமாகாந்தன், உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்துகின்ற உள்ளுராட்சி ராட்சி மன்ற அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் வீ.நவநீதன், பிரதேச சபைகளின் செயலாளர்கள, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாநகர சபையின் பிரதி முதல்வர் மற்றும் பதில் முதல்வர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தில் கொரோனா பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றங்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியது. அந்த வகையில் மக்களோடு மிக நெருங்கிப் பழகி அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரம் பெற்ற மன்னர்களாக இருக்கும் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளையில் உள்ளுராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய, செய்யத் தவறிய சில விடயங்களையும் நான் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். பெரும்பாலான வீதிகளின் இரு பக்கங்களிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை அகற்ற வேண்டும். வீதிகளில் நடமாடும் மாடுகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட பிராணிகளைக் கட்டுப்படுத்தி அதனூடாக நிகழும் வீதி விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.

சில விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு சட்டங்கள்இயற்றப்பட வேண்டுமென கூறப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை இருக்கின்ற சட்டங்களை நூறுவீதம் பயன் படுத்தினாலே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். உதாரணமாக, சிற்றுண்டிசாலைகளின் கழிவுகளை முறையாக அகற்றினாலே டெங்கு போன்ற நோய்கள் வராமல் நம்மால் தடுக்க முடியும்.

முறையான அனுமதியின்றிக் கட்டப்படும் கட்டடங்கள் மற்;;றும் அனுமதியின்றி செய்யப்படும் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித பாராபட்சமுமின்றி உங்களின் அதிகாரத்தினூடாகத் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களுக்கான சேவையாற்றும் பொறுப்பிற்கு வந்தபின்னர் நீங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களல்ல. நீங்கள் அரச அதிகாரகளாக மட்டும் செயல்படுங்கள். உங்களை நம்பி உங்களுக்கு வாக்களித்;த மக்களுக்கு முழு அர்ப்பணிப்போடு சேவையாற்றுங்கள்.

அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க நான் தயாராகவுள்ளேன். ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகளும் சேவைகளும் நீண்ட காலங்களாக வெவ்வேறு வகையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே அந்த நிறுவன அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்