ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0
2
16 / 100

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று 20.10.2021 புதன்கிழமை P W D வீதி ,முல்லைத்தீவு என்னும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட திறப்பு விழாவானது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் காலை 09 மணிக்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி எஸ் ரகுராம் அவர்கள் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததை தொடர்ந்து அலுவலக கட்டிடத்தினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் யாழ் ஊடக அமைய நிறுவுனர் ரத்தினம் தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.