எடையை குறைப்பு ஊறவைத்த உலர்திராட்சை… எப்படி சாப்பிடணும்?

0
17
ஊற வைத்த திராட்சைகள் ஏராளமான நன்மைகளை தன்னுடன் கொண்டுள்ளன. எடை இழப்பு முதல் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகின்றன. தினமும் அவற்றை உண்பதால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம்.

அதிக பேருக்கு பிடித்த பழமாக திராட்சை உள்ளது. சிறு வயது முதலே பலர் திராட்சையை சாப்பிட்டு வருக்கிறோம். ஆனால் யாரும் அவற்றில் உள்ள நல்லது கெட்டதை பற்றி யோசித்திருக்க மாட்டோம். ஆனால் திராட்சையை ஊற வைத்து உண்பது அதிக பலன்களை அளிக்கிறது.

ஊற வைத்த திராட்சையானது ஊட்டச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் ஊற வைத்த திராட்சையை உண்பது நல்ல யோசனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் திராட்சையை வெறுமையாக சாப்பிடுவதை விட ஊற வைத்து உட்கொள்வதன் மூலம் உடலானது ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.

​எடையை குறைக்க

இப்போது உடல் எடையை குறைக்க ஒரு சுவையான உணவை குறித்து பார்க்க போகிறோம். திராட்சை உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரையானது இயற்கையான சர்க்கரையாகும். இதனால் இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஊறவைத்த திராட்சை இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது. மேலும் இவை அதிகப்படியான கலோரிகளை கொண்டிருப்பதில்லை. எனவே இறுதியாக இவை எடை இழப்புக்கு அதிகமாக உதவுகின்றன. ஏனெனில் அதிகப்படியான பசியும் கலோரிகளுமே எடை அதிகமாக காரணமாக உள்ளன.

சர்க்கரைக்கு திராட்சை ஒரு சிறந்த மாற்று பொருளாகும். எனவே அவற்றை கொண்டு நீங்கள் சிற்றுண்டி செய்யலாம்.

​அஜீரணக்கோளாறு நீங்க

செரிமானத்தை மேம்படுத்த திராட்சை உதவுகிறது. ஊற வைத்த திராட்சையானது மல சிக்கலை சரி செய்கிறது. மேலும் இது உணவு நன்றாக ஜீரணமாக உதவி புரிகிறது. ஏனெனில் திராட்சை அதிகப்படியான நார்ச்சத்துக்களை கொண்டுள்ளன.