எனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்

0
82

இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு, அவரது தாயை திருமணம் செய்து கொள்ள அழகான 50 வயதான மணமகன் தேவை என பதிவிட்டுள்ளார்.

மேலும், மணமகன் சைவ உணவு உண்பவராகவும், மதுப் பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என, ஆஸ்தா வர்மா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் சுயவிவரக் குறிப்பில், தான் சட்டக்கல்லூரி மாணவி என குறிப்பிட்டுள்ளார். தன் தாய்க்கு மணமகன் தேடும் ஆஸ்தா வர்மாவை சமூக வலைதளவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரை, “பாசமான, கனிவான மகள்’ என்று பாராட்டும் நெட்டிசன்கள், அவர் விரும்புவது போன்றே அவரின் தாய்க்கு ஏற்ற மணமகன் கிடைப்பார் என வாழ்த்தி வருகின்றனர்.