என் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்… எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்

0
11

பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பாடலுக்கு ரசிகராக இல்லாதவர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் எஸ்பிபி மறைவு குறித்து கூறியதாவது:

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.