எல்லாரும் போட்டோ பாத்தீங்களா ஆன போட்டோ உள்ள என்ன இருக்குன்னு பாத்தீங்களா..?

0
152

மரம் நடும் போட்டோவில் நடிகர் விஜய் வைத்திருக்கும் குறியீடு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார்.

அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் விஜய், இது உங்களுக்காக மகேஷ் பாபுகாரு என சவாலை ஏற்றுக்கொண்டதை தெரிவித்தார்.

விஜயின் போட்டோக்களை அவரது ரசிகர்கள் பெரும் வைரலாக்கினர். தொடர்ந்து பிரபலங்கள் பலரும் நடிகர் விஜயின் முன்னெடுப்புக்கு பாராட்டும் வாழ்த்தும் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் போட்டோக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

காரணம் நடிகர் விஜயின் கெட்டப்புதான். விஜய் எப்போதும் படப்பிடிப்பு முடிந்ததும் தனது, கதாப்பாத்திரத்தின் கெட்டப்பை மாற்றி இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். அதாவது தாடியுடனோ அல்லது க்ளீன் ஷேவிங் செய்து நார்மல் லுக்கில் காணப்படுவார்.

ஆனால் நேற்று வெளியான செடி நடும் போட்டோவில் நடிகர் விஜய் இன்னமும் மாஸ்டர் படத்தில் உள்ள கெட்டப்பில்தான் இருக்கிறார். ஹேர் ஸ்டைல் தாடி என மாஸ்டர் படத்தின் போஸ்டர் லுக்கில் இருந்தப்படியே உள்ளார்.

இதனால் மாஸ்டர் படத்தில் ஏதாவது அப்டேட் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் வெளியான சந்தானத்தின் பிஸ்கோத் பட ட்ரெயிலரில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் OTT யில் படத்தை ரிலீஸ் செய்யலாமா என்ற கரண்ட் டயலாக் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதேபோல் மாஸ்க் போடாமல் ஏன் வந்தாய் என்று சந்தானம் கேட்பதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நடிகர் விஜய், இன்னமும் மாஸ்டர் லுக்கில் இருப்பதால் தற்போது வாட்டி வதைத்து வரும் கொரோனாவை வைத்து ஏதாவது அப்டேட் செய்யப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் மாணவர்களின் முழுக் கல்வியாண்டும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மாணவர்களின் ஒரு முழு கல்வியாண்டும் என்னவாக போகிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதால் அதனை மையப்படுத்தி ஏதாவது சில காட்சிகளை இன்செர்ட் செய்ய உள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜயின் படங்களில் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் மெனக்கெடல் இருக்கும்