“ஏன் மாஸ்க் போடல?” என கேள்வி கேட்ட பெண்ணை அடித்து கொலை செய்த கொடூரம்…

0
685

நெருங்கி வந்த நபரிடம், ஏன் மாஸ்க் போடல என்று கேட்டதற்காகவே கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதில் ஒரு பெண்ணின் மண்டை உடைந்து, தற்போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்தேவிட்டார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் ரென்ட்டசின்தலா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் கர்னாடி ஏலமண்டலா… இவரது குடும்பத்தினர் சாலையில் சென்றபோது, அன்னப்பு ரெட்டி என்ற இளைஞர் மாஸ்க் போடாமல் வந்துள்ளார்.

இவர்களுக்கு மிக அருகிலேயே ஒட்டி வந்து அவர் செல்லவும், ஏலமண்டலாவின் குடும்பத்தினர் ஏன் மாஸ்க் போடாம இப்படி வர்றே என்று கண்டித்தனர்.. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு வந்துவிட்டது. இதற்கு பிறகு சில நாட்களுக்கு பிறகு ஏலமண்டலாவும் குடும்பத்தினரும் காய்கறி வாங்க மார்க்கெட் சென்றிருந்தனர்.

அப்போது, அங்கேயும் மாஸ்க் போடாமல் அன்னப்பு ரெட்டி சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இதனால் ஏலமண்டலா குடும்பத்தினர், மாஸ்க் போட்டுக் கொண்டு வெளியே வருமாறு சொன்னார்கள்.இதனால் கோபமடைந்த அன்னப்பு ரெட்டி, தன்னுடைய நண்பர்கள் 4 பேரை அழைத்து வந்து மார்க்கெட்டிலேயே சண்டை போட்டுள்ளார்.. ஏலமண்டலாவின் மனைவி, மகளையும் கட்டையால் அடித்து தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் ஏலமண்டலாவின் மகள் ஃபாத்திமாவுக்கு தலையில் பலமாக அடிபட்டது. ரத்தம் வழிய அருகிலிருந்த அரசு ஆஸ்பத்திரியில் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை தரப்பட்டும், சிகிச்சை பலன் அளிக்காமல் பாத்திமா இறந்துவிட்டார். பாத்திமாவின் சடலத்தை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.. உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் இந்த மரணம் தொடர்பாக புகாரும் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் அன்னப்பு ரெட்டியையும், 4 நண்பர்களையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.