ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மூவரின் பெயர் பரிந்துரை

0
6

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் யாருக்கு என்பது தொடர்பில் இன்று (12) அறிவிக்கப்பட இருந்த போதிலும் இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் அவரது கொள்ளுபிட்டிய வீட்டில் ஒன்றுகூடியிருந்தனர்.

இருப்பினும் இன்று இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்சியின் தேசிய ஒருங்கமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் ருவன் விஜேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியவர்களின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.