ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து மருத்துவர்கள் சாதனை!

0
23

இத்தாலியில் தலையொட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளை 30 பேர் கொண்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.

இதற்காக 3டி மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக மருத்துவர்கள் திட்டமிட்டு வந்ததாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மண்டை ஓட்டுடன் இரத்த நாளங்களும் இந்த இரட்டைக்குழந்தைகளுக்கு ஒட்டி இருந்தது.

இவ்வாறு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது