ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயம்

0
8

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் மாங்குளம் நோக்கிய திசையில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளை மாங்குளம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.