ஒரு சிறிய அமைச்சு பதவி என்றாலும் தாருங்கள்… அரசாங்கத்திடம் கெஞ்சும் தமிழ் அரசியல்வாதி

0
1912

சமகால அரசாங்கத்தில் முக்கியத்துவம் இல்லாத அமைச்சு ஒன்றை வழங்கினால் கூட, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் என தமிழ் அரசியல்வாதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சியின் பிரபலமாக நபரிடம் இந்த கோரிக்கையை குறித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சர் பதவி இல்லை என்றாலும் இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர் பதவியாவது வழங்கினால் தான் அரசாங்க்துடன் இணைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த உறுப்பினரின் கோரிக்கையை அரசாங்க தரப்பு கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமகால அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் வரப்பிரசாதங்களை வழங்கி எந்தவொரு உறுப்பினரையும் இணைந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரணியில் இருந்து கொண்டே ஆதரவு தெரிவிப்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என, அமைச்சு பதவி கேட்டவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.