ஒரே கட்சி வேட்பாளர்களின் ஆதவாளர்கள் இடையே மோதல்!

0
5

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் பிறைந்துறைச்சேனை பகுதியில் இடம்பெற்ற கைக்கலப்பு காரணமாக ஒரு வேட்பாளரின் வாகனத்தில் இருந்த தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்களுடன், இரண்டு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகளும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் கைக்கலப்பு ஏற்பட்டிருந்தது.