இந்தியாவின் ஜாதக பலன்… இதெல்லாம் நடக்கப்போகுதாம்!

0
109

74வது சுதந்திர தினம் தொடங்கி ஒரு ஆண்டு காலம் எப்படிப்பட்ட யோக பலன் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

சூரியனை பூமி சுற்றி வருவதும், அப்படி பூமி சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஆகஸ்ட் 15ல் இந்திய சுதந்திர தினமும், ஆகஸ்ட் 16ல் சூரியன் அவரின் சொந்த வீடான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்த ஒரு ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்…

ஜோதிடப்படி பூமியின் நகர்வு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் அமர்வது வழக்கம். பூமி இருக்கக் கூடிய ஒரு நட்சத்திர அமைப்பு மற்றும் மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும் அமைப்பு பொறுத்து ஜாதக பலன் பார்க்கப்படுகிறது.

அதுவே ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் ஜோதிட பலன்களை அறிந்து கொள்ள மேதினி ஜோதிட முறை பயன்படுத்தப்படுகிறது. அதன் படி 74வது சுந்திர தினம் தொடங்கி அடுத்த ஒரு ஆண்டு காலம் இந்தியாவிற்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்….

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 74ம் ஆண்டு தொடங்கும். இந்த நேரத்தில் தனுசு ராசியில் கிரகங்கள் ஏற்றம் பெறுவதால் இது உயர் தலைவர்களுடனான ஒரு போர் மற்றும் விரும்பத்தகாத சம்பவத்தைக் குறிக்கிறது.

அதே போல் சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷபத்தில் ராகுவும், போர் குணம் கொண்ட செவ்வாய் அதிபதியாக கொண்ட விருச்சிகத்தில் கேதுவும் வருவதாலும், புதனை ராசி அதிபதியாக கொண்ட மிதுனத்திற்கு 8ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளதால் போர் பதற்றம் உருவாகும்.

மேலும் சனியின் வீட்டில் குருவின் சஞ்சாரம் நிகழும் போது மேலும் போர் பதற்றம் உருவாகும்.

சனியில் வக்ர நிலையின் காரணமாக சூரியன், புதன் கட்டுப்படுத்தப்படுவதால் இந்தியாவின் பொருளாதாரத்தில் தொடர்ந்து மந்தநிலை மற்றும் சந்தையில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கக் கூடும். சூரியன் மற்றும் புதன் மீது சனியின் பார்வை பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து, தங்கத்தில் தொடர்ந்து ஏற்றம் பெறுவதற்கான அறிகுறியாகும்.

கடந்த ஒரு வருடத்தில், ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்வதும், அயோத்தியில் ராம் கோயில் கட்டுமானத்தைத் தொடங்கியதன் மூலம், பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையின் முக்கிய மூன்று தீர்மானங்களில் இரண்டை நிறைவேற்றியுள்ளது.

இப்போது, இந்தியாவின் சுதந்திர ஆண்டு ஜாதகத்தின் ஏழாவது வீட்டில், ராகு சுக்கிரனின் வீட்டில் சஞ்சரிக்கப் போவதால் திருமணம் தொடர்பான சட்டங்களில் முக்கிய திருத்தங்களான முஸ்லீம் பலதார மணம், நிக்கா-ஹலாலா, விவாகரத்துக்குப் பிறகு முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம், முஸ்லிம் தனிப்பட்ட சட்டம் ஆகியவற்றில் சட்ட திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு வருடத்திற்குள், திருமணம், சொத்து, தத்தெடுப்பு போன்ற சட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் சில குழுக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ராகு, சுக்கிரன் இணைவு என்பது பெரிய திருமணச் சட்டங்களில் மாற்றத்தின் அறிகுறியாகும். இதற்காக அவர்கள் சமூகத்தின் பெரும் பகுதியினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் சுதந்திர ஜாதக பலனில் சந்திரன் மற்றும் சனியின் கடினமான நிலை காரணமாக பெரிய சமூக மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்படக் கூடும். இது நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும்.

வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்