கஞ்சாவுடன் கைதான கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன்!

0
8
11 / 100

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், ஒன்றரை கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், கொக்குவில் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் புகையிரத நிலையப் பகுதியில் வைத்து, பெருமளவு கஞ்சா கைமாற்றப்படுவதாக, யாழ். விசேட குற்றத்தடுப்புக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, குறித்த இளைஞன் கைசெய்யப்பட்டார்.