கடலில் விழுந்த 64 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

0
6

பேருவளை நகருக்கு அருகில் கடலில் விழுந்த 64 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கடற்கரைக்கு சென்று பாறை ஒன்றின் மீது தனது பணப் பையை வைத்து விட்டு, இயற்கை கடனை கழிக்க முயற்சித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு பின்னரான பிரேதப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.