கணனி மயப்படுத்தப்பட்டது ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கி

0
22

ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியின் கணணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(16.12.2020) நடைபெற்றது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி மாதுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலாளரும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக மாவட்ட பணிப்பாளருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவை வழங்கிவரும் சமுர்த்தி வங்கியானது சாதாரண நிலையிலேயே இயங்கிவந்தது.

இதனால் பயனாளிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக தற்போது சமுர்த்தி வங்கிகள் தேசிய ரீதியில் கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியினது கணனி மயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று 16.12.2020 கிளிநொச்சி மாவட்ட செயலாளரும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக மாவட்ட பணிப்பாளருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் வைபவரீதியக ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இன் நிகழ்வில் கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் ஊடான வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ப. நந்தகுமார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவனேசன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.நித்தியானந்தன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் வசந்தரூபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கணனி தரவேற்றுனர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.