கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற குழுவொன்று செய்த மோசம்

0
13

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற குழுவொன்று பேருந்தை நிறுத்தி விட்டு மதுபானம் அருந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்ற குழுவினரே இவ்வாறு செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் கம்பஹாவை நோக்கி பயணித்த பேருந்தை இடையில் நிறுத்திவிட்டு மதுபான விருந்து ஒன்றை நடத்தியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை இயக்குனர் மிகார ஏபா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் குடிபோதையில் இருந்த குழுவினர் பேருந்திற்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி, இராணுவத்தினர் மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளரிடம் அறிவித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.