கந்தன்குளத்தின் அணைக்கட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..

0
4

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள கந்தன்குளத்தின் அணைக்கட்டின் ஊடாக பெருமளவு நீர் வெளியேறி வருவதனால், அணைக்கட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டின் துருசு பகுதியின் அருகில் குளத்திலிருந்து நீர் வெளியேறி வருகிறது. இது அணைக்கட்டின் மிக மோசமான நிலைமையாகும். தற்போது இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் இணைந்து மண் மூடைகளை அடுக்கி தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சேவியர் கடைச் சந்திக்கருகில் குளத்தின் கீழ் பகுதி மற்றும் கந்தன்குளத்தின் நீர் வெளியேறுகின்ற உருத்திரபுரம் பகுதியில் வாழ்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.