கந்தளாய் . விமானம் விழுந்ததில் விமானி பலி..

0
8

விமானப்படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனக்குடா வான்படை முகாமிலிருந்து புறப்பட்ட விமானம், கந்தளாய் வான்பரப்பில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்புகள் இல்லாமல் போனதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

விமானத்தில் பயிற்சி விமானி விமானி மாத்திரமே பயணித்துள்ளார் என்றும், விமானத்துக்குள் சிக்கிய விமானி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.