கருணா அம்மான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமான இனவாதத்தைப் பேசுகிறார்.

0
15

கிழக்கில் தமிழருக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகள் இருக்கலாம். முரண்பாடுகள் என்று சொல்வதை விட, ஆதங்கங்கள் என்று சொல்வதே பொருத்தம். அவர்களுக்குக் கிடைப்பது, கொடுக்கப்படுவது நமக்குக் கிடைக்கவில்லை என்ற மட்டத்திலே தான் நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது.

கருணாவோ கிழக்குத் தமிழரின் பரிபூரணமான எதிரியாக முஸ்லிம்களைக் காட்ட விளைகிறார். கருணாவும், அதாவுல்லாவும் ஒரே கையால் இயக்கப்படுபவர்கள். ஆனால், அதாவுல்லாவைக் காட்டி கருணா முழு முஸ்லிம்களுக்கும் எதிராக இனவாதம் கக்குகிறார். (அதாவுல்லாவும் தமிழருக்கு எதிரான நேரடி இனவாதம் பேசுகிறாரா என்பதை அறியேன்). எது எப்படியோ அநேகமாக இருவருமே பாராளுமன்றம் செல்லப் போகிறார்கள்.

ராஜபக்சக்கள் மிகத் திறமையாக தமிழ்-முஸ்லிம் பிரச்சினையை கிழக்கில் ஊதி வளர்க்கிறார்கள்.