கவலைக்கிடமான நிலையில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி… காரணம் இதுதான்

0
169

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. அதேசமயம் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா உறுதிசெய்த 24 மணிநேரத்திற்கு பின்னரும் 2012 – 2017 முதல் இந்தியாவின் ஜனாதிபதியாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, , தொடர்ந்து தீவிர சிகிச்சையில் வென்டிலேட்டர் உதவியுடன் கவலைக்கிடமாக இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயதான பிராணப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், அடுத்த சில மணிநேரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியாக பணியாற்றியதைத் தவிர, முகர்ஜி நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் போன்ற அரசாங்கத்தின் ஒவ்வொரு முக்கியமான துறைகளிலும் சேவையாற்றியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.