காணாமற்போன யாழ் பல்லைக்கழக மாணவர்கள் ஒன்பது பேரும் மீட்பு

0
72

காணாமல்போன ஒன்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயுள்ளனர்.

இதன் பின்னர் அவர்களை கண்டுபிடிக்க மீட்பு உதவிக்காக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதும், கிராமவாசிகள் உட்பட பல மீட்புக் குழுவினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.