காதலியுடன் செல்பி எடுக்க முயன்ற தமிழ் வைத்தியர் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி

0
11

காலியிலுள்ள நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற வைத்தியர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரும், காதலியும் அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (19) மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

அவர் நீரில் விழுந்ததும் காதலி கூச்சலிட்டு, தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் உதவி கேட்டார். இன்னொரு சுற்றுலா பயணி தண்ணீரில் குதித்து இளைஞனை மீட்டார். எனினும், அவர் அதிக நீர் உட்கொண்டு ஆபத்தான நிலையில் இருந்தது. முதலுதவி மூலம் அவரை மீட்கும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, நெலுவ கிராம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார்.

இறந்தவரின் சடலம் நெலுவ கிராம மருத்துவமனையில் வைக்கப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனை நேற்று (20) கராபிட்டி மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

இது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வைத்தியர் ஆவார்.

உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது.