காவல்நிலைய கட்டிடத்தில் தீ… இரத்தினபுரியில் சம்பவம்

0
5

இரத்தினபுரி-வெலிகெபொல காவல்நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி மற்றும் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதிகளிலுமே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலும் சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை இரத்தினபுரி குற்றவியல் பிரிவின் ஆய்வக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.