காவல் துறையினரின் அதிரடியாக கைது செய்யப்படும் நபர்கள்

0
26

கிரேண்பாஸ் காவல்துறையை மையப்படுத்தி வட கொழும்பு காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

135 கிராமும் 35 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 45 பேரும் 215 கிரேமும் 50 மில்லி கிராம் கஞ்சா போதைப்பெருளுடன் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 61 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நாளை மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இரண்டு துப்பாக்கிகளுடன் 2 சந்தேகத்துக்குரியவர்கள் – மத்துகம – யடதொலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகம காவல்துறையினர் முன்னெடுத்த சுற்றி வளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் மத்துகம ஷான் என அறியப்படும் தொடங்கொட லியனகே ஷான் அரோஷ் ஜயசிங்கவின் உதவியாளர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.