கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

  0
  9

  துபாயில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

  ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
  பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘ஆடுகளம் குறித்து சரியாக கணிக்க முடியாததால் முதலில் பந்து வீச முடிவு செய்தோம். ஒட்டு மொத்த அணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்திற்குப்பின் வெளியே வந்து விளையாட இருப்பது சிறப்பான வாய்ப்பு’’ என்றார்.
  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
  1. தவான், 2. பிரித்வி ஷா, 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஷிம்ரோன் ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. ரபடா, 10. அன்ரச் நோர்ஜ், 11. மோகித் சர்மா.
  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-
  1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. சர்பராஸ் கான், 5. கிளென் மேக்ஸ்வெல், 6. நிக்கோலஸ் பூரண், 7. கிருஷ்ணப்பா கவுதம், 8. கிறிஸ் ஜோர்டான், 9. ஷெல்டன் காட்ரெல், 10. ரவி பிஷ்னோய், 11. முகமது ஷமி.