கிளிநொச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை.

0
6

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்கு, வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடைமழை காரணமாக, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. அத்துடன், 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தால், வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முரசுமோட்டை, பன்னங்கண்டி, மருதநகர், ஊரியான், கண்டாவளை, கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மழை வீழ்ச்சியின் தன்மையை பொறுத்து, வான் கதவுகளைத்; திறப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது