குவைத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட இலங்கை பெண் – தீவிர விசாரணையில் குவைத் பொலிஸ்

0
16

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

அண்மையில் எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கையை சேர்ந்த பணிப்பெண்ணிற்கு தொழில்வாய்ப்பை வழங்கிய தம்பதியினரை குவைத் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

முழுமையான அறிக்கையை பெறுவதற்கு உயிரிழந்த பணிப்பெண்ணின் உடலை தடயவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.