கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம்… சம்பந்தன் பளார் பதில்

0
43

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன், இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துரைராஜசிங்கம் தான் இந்த விடயத்திற்கு பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலை அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டும் என்று கட்சியின் யாழ். மாவட்டக்கிளை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

எனினும், அந்தத் தீர்மானத்தை மீறி அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிவிசேடவர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழரசுக் கட்சிமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் யாருக்கு உரியது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கமே தேர்தல்கள் செயலகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.