கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபர் பலி

0
13

அம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்ததொல சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இருந்த நபர் ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பரகஹதொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.