கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சிறுமி…இருவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு..!

0
64

தண்ணீர் டிரம்மில் திணித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுமியின் சடலத்தில் கழுத்து, உதடு பகுதிகளில் நிறைய காயங்கள் இருந்ததாம்.. இதையடுத்து, 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது…. தொடர் விசாரணையை சாத்தான்குளம் போலீசார் கையில் எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை என்ற கிராமம்.. இங்கு இந்திரா நகர் பகுதியில் ஒரு ஓடை பாலம் இருக்கிறது.. இந்த இடத்தில் அந்த பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

அப்படித்தான் நேற்றும் பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் ஒருவன் சிக்ஸர் அடித்திருக்கிறான்.. அந்த பந்து கொஞ்ச தூரத்தில் போய் விழுந்தது.. அதனை எடுக்க இவர்களில் சிலர் ஓடியபோதுதான் குப்பென்று நாற்றம் அடித்தது. அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் இருந்துதான் அந்த துர்நாற்றம் வீசியது.. அதனால் டிரம்மை திறந்து பார்த்தபோதுதான், அதிர்ச்சி அடைந்து அலறினர்.. 7 வயது சிறுமியின் பிணமும், அந்த சடலம் முழுக்க காயங்களும் கிடந்தன.. பயந்து போன சிறுவர்கள் ஊருக்குள் போய் தகவலை சொல்ல, ஊர்மக்கள் சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

பிறகுதான் போலீசார் வந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.. கழுத்து, வாய் பகுதிகளில் நிறைய காயங்கள் இருந்திருக்கிறது.. உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்ய பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்… உடனடியாக விசாரணையையும் துவக்கினர். படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு அப்பா இல்லை.. அம்மாதான் வளர்த்து வந்துள்ளார்.. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம்.. ஓலை குடிசை வீடு.. அந்த குடிசைக்கு கரண்ட்கூட இல்லை.. அதனால்தான் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி பார்க்க செல்வது வழக்கமாம். அந்த வீட்டில் உள்ள இளைஞன் பெயர் முத்தீஸ்வரன்.. காலேஜ் படிக்கிறார்.. அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து போவதை கவனித்தபடியே இருந்திருக்கிறார்.. சம்பவத்தன்றும், முத்தீஸ்வரன் வீட்டில் டிவி பார்க்க சிறுமி சென்றபோது, முத்தீஸ்வரன் நண்பன் நித்தீஸ்வரனும் அங்கு இருந்திருக்கிறார்.. 2 பேருமே சேர்ந்து சிறுமியை சீரழித்து கொன்றுள்ளதாக முதல்கட்டமாக கூறப்பட்டது.

டிரம்மில் சடலத்தை கண்டதுமே, சிறுமி எங்கெல்லாம் சென்று வருவார் என்ற விசாரணையில், டிவி பார்க்க மட்டும் இந்த வீட்டுக்கு சென்று வருவதாக அவரது அம்மா தெரிவித்தார்… அதனால்தான் முத்தீஸ்வரனை பிடித்து விசாரித்தனர். பிறகு நடந்த குற்றத்தை முத்தீஸ்வரன் ஒப்புக் கொண்டார்.. நித்தீஸ்வரன் உதவியுடன் சடலத்தை வீட்டில் இருந்த டிரம்மில் திணித்து வைத்துள்ளனர்.

அதன்பிறகு அந்த டிரம்பை காட்டுப்பகுதியில் இருந்த ஓடை பாலம் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துள்ளனர். இதையடுத்து, முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் 2 பேருமே கைதாகி உள்ளனர்.. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. சிறுமியின் கழுத்து, உதட்டு பகுதியில் நிறைய காயம் இருந்ததாம்.. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.