கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம்

0
10

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்டிருக்கும் முடிவு முழு நாட்டிற்கும் ஏற்பட்ட தலைகுனிவாகும் என கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து ஆரம்ப காலத்தில் சுதந்திரத்திற்காக பெரும்பான்மை மக்களுடன் தோளோடு தோள் கொடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் ஜனாஸாக்களை ஏற்றுமதி செய்வதும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இதன் பின்னனியில் ஏற்றுமதி வியாபாரிகள் மறைந்திருக்கின்றார்களோ என்ற சந்தேகமும் தமக்கு இருப்பதாக கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகள் எவ்வகையிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றவை. இதனை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.