கொரோனாவை எதிர்கொள்ள 6 வகையான தடுப்பூசிகள் தயாரிப்பு

0
10

சர்வதேச ரீதியாக அரசாங்கங்களும், ஒளடத உற்பத்தி நிறுவனங்களும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான பொருத்தமான தடுப்பூசியினை தயாரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் ஆறு வகையிலான தடுப்பூசிகளை தயாரித்துள்ளதுடன், ரஷ்யாவும் கொவிட்-19 தடுப்பூசியை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைய இரண்டு வகையிலான 36 கோடியே 20 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில், சுகாதார மற்றும் சமூக பணியாளர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள், கடுமையான உடல்நல குறைவை கொண்டவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரித்தானிய பிரபல ஒளடத உற்பத்தி நிறுவனம் 3 கோடி தடுப்பூசி மருந்துக்களை, இலாபம் அற்ற முறையில் விரைவில் அவசர தொற்று நோயாளர்களுக்கு வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.