கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸ் வெளியுட்டுள்ள உருக்கமான ஆடியோ!

0
1169

சமீபத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் அவருடைய பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருணாஸுக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

முதலில் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் கருணாஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே தனது தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து கருணாஸின் மகனும், அசுரன் படத்தில் தனுஷுன் இரண்டாவது மகனாகவும் நடித்த கென் கருணாஸ் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸ், மிகவும் உணர்ச்சிவசமான பதிவு ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் போது இது கருணாஸா என்று எண்ணத் தோன்றும். அந்த அளவு கருணாஸ் உருக்குலைந்த நிலையில் உள்ளார்.