கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

0
23

இலங்கையில் இன்று மாலை மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் முழுமையான எண்ணிக்கை 2867ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.