கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது..

0
17
46 / 100

மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்ற கோரிக்கை ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கொரோனா தொற்று நோய் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என சமூகத்தில் நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

எனினும் அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன மற்றும் டி.யூ .குணசேகர ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

ஆனால், அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த யோசனைக்கு எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பது என ஆளும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தீர்மானத்துள்ளனர்.

அதேவேளை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை பசில் ராஜபக்சவுக்கு இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.