கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

0
40
12 / 100

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முன்னதாக ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையிடமும் தோல்வியடைந்துள்ளது.
இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை.இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
கொல்கத்தா:
சுக்மன் கில், சுனில் நரேன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ஆண்டே ரசல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், நாகர்கோட்டி, வி சக்ரவர்த்தி
ஐதராபாத்:-
டேவிட் வார்னர், ஜானி பிரிஷ்டோ, மணீஷ் பாண்டே, பிரியம் ஹர்ஹ், சஹா, முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி நடராஜன்.