கொழும்பில் 20 மாத குழந்தை பலி

0
6

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட 20 மாதம் அதாவது ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று மாலை இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தையை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவருக்கு நிமோனியாவின் நிலைமை தீவிரமாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

இந்த குழந்தையின் மரணத்திற்கு நேரடிக் காரணம் அவருக்கு கொரோனா தொற்றியமை அல்ல எனவும் தீவிரமான நிமோனியாவே மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த குழந்தை மோதர பிரதேசத்தை சேர்ந்தது என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.