கோத்தபாய ராஜபக்ச அதிகாரங்களை மகிந்தவிடம் கையளிக்கவேண்டும்

0
6
11 / 100

ஜனாதிபதியின் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை 200 வீதம் இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அரசாங்கத்தை பிரதமர் பொறுப்பேற்று அதனை கட்டியெழுப்பவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவி வகிக்கின்ற போதிலும் ஜனாதிபதியை பொறுப்பை அனுபவமுள்ள ஒருவர் ஏற்கவேண்டும் அது மகிந்த ராஜபக்சவை தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விவசாயம் முற்றாக வீழ்ச்சியடைந்துவிட்டது என தெரிவித்துள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உரங்கள் குறித்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகளே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கை காரணமாகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் வாக்குகளை அளித்தார்கள் என தெரிவித்துள்ள பௌத்த மதகுரு பெரும் நம்பிக்கையுடன் மதில்களில் படம்வரைந்த இந்த நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றத்தினால் துயரில்சிக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நிலைமையை மாற்றுவதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது மகிந்த ராஜபக்சவிடம் அதிகாரத்தை கையளிக்கும் முடிவை ஜனாதிபதி எதிர்க்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனை எதிர்த்தால் அவர் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.