கோர விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய நடிகை குஷ்பு…

0
409

நடிகை குஷ்பூவின் கார் சாலையில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது, அவரது கார் கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அவரது காருக்கு பலமான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த அவரது பதிவில், ‘கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றியிருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார்.