சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கை குடும்பம் கைது

0
10

இலங்கையில் மில்லியன் கணக்கான தொகைக்கு கடன்பட்டுள்ள இலங்கை குடும்பமொன்று சட்டவிரோதமாக நுழைந்ததற்காக தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளது.

படகில் இந்தியாவுக்குள் நுழைந்த 10 வயது குழந்தை உட்பட மூன்று பேருடன் குறித்த குடும்பத்தை இந்திய கடலோர காவற்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஷிஹாப் ஷெரிப், அவரது மனைவியான பாத்திமா ஃபர்சனா மார்க்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஷிஹாப் ஷெரிப் தலைமையிலான ஒரு முதலீட்டு நிறுவனம், வைப்புத் தொகையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாயை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்த மில்லியன் கணக்கான ரூபாயை குறித்த வைப்பாளர்கள் திரும்ப கோரிய நிலையிலே இக்குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.