சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் பலாலி பொலிசாரால் கைது!

0
28
50 / 100

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- வளலாய் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார். இதுவரை காலமும் அங்கு வசித்து வந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாடு திரும்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தகவல் அறிந்த பலாலி பொலிஸார், குறித்த நபரை கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதேவேளை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.