சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டோனி… அதிர்ச்சியில் ரசிகர்கள்

    0
    23

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி சர்வதேச கிரிக்கெ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடமல் இருந்த டோனி, வரும் ஐபிஎல் தொடருக்கு பின் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    அதில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இரவு 7.29 மணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், என்னை ஆதாரித்து அன்பு காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

     

     

    View this post on Instagram

     

    Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

    A post shared by M S Dhoni (@mahi7781) on