சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா?

0
2
11 / 100

எம்.எஸ்.தீன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 06 மாதங்கள்விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானரிஷாத் பதியுதீன் வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலா 50 இலட்சம் ரூபாபெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேஉத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, அவரது வீட்டில் பணியாற்றிவந்தசிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மீது குற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்புபிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்வழக்கிலும் அவருக்கு பிணைவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைதொடர்பில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவரை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காகவே கைதுசெய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டே முதன்மையானதாக காணப்படுகின்றது. இதேவேளை,அவரது கைதுநடவடிக்கைகளின் பின்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள்உள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும், ரிஷாத் பதியுதீன் கடந்த 06 மாத காலப்பகுதியில் பல்வேறுபடிப்பினைகளைப் பெற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. தமது கட்சிக்கும், தனக்கும் உண்மையாகஇருப்பவர்கள் யாரென்பதனை தெளிவாக உணர்ந்திருப்பார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்சார்பில் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளின்பின்னால் ரிஷாத் பதியுதீன் இருந்துள்ளார் என்பது தெளிவானதாகும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-2