கடையில் வாங்கி சாப்பிட்ட சாக்லேட் மார்குயுஸை வீட்டில் செய்வது எப்படி?

0
8

தேவையான பொருட்கள்

டார்க் சாக்லேட் – 600  கிராம்

சர்க்கரை –  175 கிராம்
முட்டையின் மஞ்சள் கரு –  6 துண்டுகள்
முட்டை –  6 துண்டுகள்
கோகோ பவுடர் –  70 கிராம்
லிட்டர் காபி –  10 மில்லி
கிரீம் –  500 கிராம்
பெர்ரீஸ் –  50 கிராம்
டார்க் சாக்லேட் –  200 கிராம்
ஃப்ரஷ் கிரீம் –  100 மில்லி லிட்டர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து அதனுள் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

அடுத்து அதில் கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை ஒரு மோல்டில் ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.

மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.

அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.

சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.